மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சமந்தாவ விடுங்க, கவர்ச்சி ததும்ப தாறுமாறாக ரெஜினா போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா! ட்ரெண்டாகும் வீடியோ!!
நடிகர் சிரஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சி ததும்ப போட்டுள்ள கலக்கல் ஆட்டம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா என்ற அந்தப் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் தற்போது சமந்தாவை போலவே நடிகை ரெஜினா கலக்கலான ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆச்சாரியா படத்திலிருந்து கலக்கலான ஐட்டம் பாடலின் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவுடன் ரெஜினா கிளாமரான உடையில் கவர்ச்சி ததும்ப துள்ளலாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.