திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாடியோவ்.. பிரம்மாண்டமாக உருவாகும் பிரபாஸின் ஆதிபுருஷ்! இத்தனை கோடி பட்ஜெட்டா!! ஷாக்கான ரசிகர்கள்!!
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த உலகெங்கும் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இப்படத்திற்கு பிறகு அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
அதுமட்டுமின்றி பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வரத் துவங்கியது. பாகுபலி படத்தை தொடர்ந்து அவர் 300 கோடி பட்ஜெட்டில் உருவான சாஹோ, 350 கோடி பட்ஜெட்டில் ராதே ஷ்யாம் மற்றும் சலார் போன்ற படங்களில் நடித்தார்.
இதைத்தொடர்ந்து பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையக் கருவாக வைத்து உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் சைஃப் அலி கான், கிருத்தி சனோன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியதாக தகவல் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது.