திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிக்கலில் சிக்கிய பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்.! கடுமையாக விமர்சித்த மத்திய பிரதேச அமைச்சர்!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இந்த திரைப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கிரித்தி சனோனும், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் அக்டோபர் 2-ந்தேதி அயோத்தியில் சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆதிபுருஷ் டீசரில் சீதை, அனுமன், ராமன் ஆகியோர் சித்தரிக்கப்பட்டது குறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, எங்களது மத நூல்களில், அனுமனின் உடை குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசரில் அனுமன் தோல் ஆடை அணிந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது தோல் சிவப்புக்கு பதிலாக கருமையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. சீதை கதாபாத்திரம் மற்றும் உடை அணியும் முறையும் சிதைக்கப்பட்டுள்ளது.
படைப்பு சுதந்திரத்தை மற்ற
மதங்கள் மீதும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிப்பது தவறானது. ஆதிபுருஷ் படத்திலிருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குமாறு
இயக்குனர் ஓம்ராவத்-க்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவர் நீக்கவில்லையென்றால், சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.