திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நானே வருவேன்; தனுஷுடன் இணைந்துள்ள பிக்பாஸ் பிரபலம்.! அட.. யாருன்னு பார்த்தீங்களா!!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமாதுறையையே கலக்கி வரும் நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் நானே வருவேன். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தில் தனுஷுடன் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நானே வருவேன் படத்தில் தனுஷுடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. அது வேறுயாருமில்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான ஆஜித் தான். அவர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஜித் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் மற்றும் செல்வராகவனுக்கு நன்றியும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.