பிக்பாஸ் வின்னர் ஆரவ் வீட்டில் நேர்ந்த பெரும் துயரம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தார்கள்! ரசிகர்கள் ஆறுதல்!



aarav-father-pass-away-today

விஜய் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஆரவ்வை சகபோட்டியாளரான நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சிவரை சென்று  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ்விற்கு தொடர்ந்து ஏராளமான படவாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் அவர் சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும், பிறகு ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்த ராஹி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். 

இந்த நிலையில் நடிகர் ஆரவ்வின் தந்தை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆரவ் மிகவும் வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து ஆரவ்விற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.