மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர்ல! உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த பிக்பாஸ் வெற்றியாளர்! வைரலாகும் புகைப்படம்! செம்ம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் ஆரவ் இணைந்து நடிக்கவுள்ள தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தடையற தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகிழ் திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். அரோல் கரோலி இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளர் ஆரவ்வும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளரானவர் ஆரவ். இவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவான ராஜபீமா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஆரவ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்க உள்ளார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.