மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது அப்பா ஸ்டைலில் அசத்தலாக ஆரி மகள் செய்த காரியம்! திரும்ப திரும்ப பார்க்கவைக்கும் செம கியூட் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 ன் வெற்றியாளரானார் நடிகர் ஆரி. அவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆரி நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் நடிப்பு மட்டுமின்றி சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்து சமூகப் பிரச்சினைகளுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை மூலம் இளம் சமுதாயத்திற்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
Hearfelt thank u from riya and me for ur wishes. Always grateful for ur love and affection.. from Aari Arujunan and Family..... pic.twitter.com/oFEdjMYHPw
— Aari Arjunan (@Aariarujunan) February 6, 2021
இந்த நிலையில் நடிகர் ஆரியின் மகள் ரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 4 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு ஆரி தனது மகளை விதை நட வைத்திருந்தார். மேலும் அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ஆரி தனது மகளை தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது ஸ்டைலில் நன்றி சொல்ல கூறியுள்ளார். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.