மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் பாலாஜியின் தந்தை திடீர் மரணம்! வெற்றியாளரான ஆரி செய்த செயலை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளரானார்.மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும்,ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில தினங்களிலேயே தனது கருத்தை வெளிப்படையாக கூறி அடிக்கடி அனைவரிடமும் கோபப்பட்டு பெரும் விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் தனது குணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் பொறுமையாக அனைவரையும் சமாளித்தார்.
Deeply saddened to hear the demise of Balaji Murugadoss's Father.. May the family have the strength and courage in these tough moments.
— Aari Arjunan (@Aariarujunan) February 2, 2021
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மகிழ்ச்சியுடன் இருந்த பாலாஜியின் தந்தை முருகதாஸ் திடீரென உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இதுகுறித்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில், பாலாஜியின் தந்தையின் மறைவை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் அவரது குடும்பத்திற்கு தைரியமும், மனவலிமையும் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.