மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளின் பிறந்தநாளன்று பிக்பாஸ் ஆரி செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வேற லெவல்தான்.. கொண்டாடும் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் நடிகர் ஆரி வெற்றியாளரானார்.
ஆரி தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் நடிப்பு மட்டுமின்றி சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்து சமூகப் பிரச்சினைகளுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை மூலம் இளம் சமுதாயத்திற்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆரி நேற்று தனது மகளின் பிறந்தநாளன்று அவரது கையால் விதை நட வைத்துள்ளார். மேலும் இத்தகைய புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நானும் ஒரு விவசாயி என குறிப்பிட்டுள்ளார்.