நாம அதையும் பாக்கணும்! ரசிகரின் செல்போனை தல பறித்தது குறித்து ஆரி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!



aari-talk-about-ajith-got-fan-mobile

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை அளித்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மேலும் நடிகர் அஜித்தும், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளார்.

 அங்கு அவரைக் கண்ட ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் கடுப்பான தல அஜித் அவரது செல்போனை பறித்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ரசிகருக்கு மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கி செல்போனை திருப்பிக் கொடுத்தார். மேலும் அங்கிருந்தவர்களிடமும் மன்னிப்பு கேட்டார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

Ajith

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடிகர் ஆரியிடம் கேட்டபோது அவர், அஜித் அந்த ரசிகரிடம் செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு, சாரி கேட்டு சென்ற பண்பையும் நீங்கள் பார்க்கவேண்டும். பிரபலங்கள் வெளியே வரும்போது இது போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரும். அவையெல்லாம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலே நடக்கிறது. சில இடங்களில் அது வெறுப்பை ஏற்படுத்தும். ரசிகர்கள் பொறுமையோடு இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் தலயை பாராட்டியே ஆகவேண்டும். அவ்வளவு கூட்டத்திற்கும் நடுவே அந்த நபரை அழைத்து செல்போனை திரும்ப கொடுத்து, இப்படி செய்யுங்கள் என அறிவுரையும் வழங்கியுள்ளார். அந்தப் பண்பையும் நாம் பார்க்கவேண்டும். பாராட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளார்.