மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி ஆட்டம் ஆரம்பம்.. சூடு பறக்கும் வீடியோவை பகிர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி போட்ட அட்டகாச பதிவு!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் பிரம்மாண்டமாக துவக்கம் ஆனது. இதில் பல துறையைச் சேர்ந்த பிரபலங்களும், ஏராளமான புதுமுகங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் இரு நாட்கள் கலகலப்பாக சென்ற நிலையில் தற்போது மோதல் துவங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று வெளியான புதிய ப்ரமோவில், இமான் அண்ணாச்சி பிக்பாஸ் டைட்டிலை காமெடி நடிகர் வெல்ல வேண்டும் என கூற பெரும் சலசலப்பு கிளம்பியது. பின்னர் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்க பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பமாகிறது என பெண் போட்டியாளர் ஒருவர் அலறுகிறார்.
Bigg boss game begins...#BiggBossTamil https://t.co/AJx11mQimv
— Aari Arujunan (@Aariarujunan) October 6, 2021
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளரான ஆரி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.