மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிட் நைட்டில் நடந்த எவிக்க்ஷன்! இரவோடு இரவாக வெளியேறிய பிரபலம் இவரா! ஷாக்கில் ரசிகர்கள்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சில காரணங்களால் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகவே தற்போது அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் பலரும் எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோர் மட்டுமே இருந்தனர். இன்னும் இரு தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிறது.
இதற்கிடையில் நடைபெறும் எழிமினேஷனில் ஜுலி அல்லது அபிராமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மிக்நைட் எவிக்ஷன் நடைபெற்றுள்ளது. அதில் எதிர்பாராத விதமாக அபிராமி வெளியேற்றப்பட்டுள்ளார். இது போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.