மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லவ் யூ பட்டு.! ஜூலியுடன் ஜாலியாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்த பிக்பாஸ் பிரபலம்.! யார்னு பார்த்தீங்களா!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக களமிறங்கினர்.
சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா டைட்டிலை வென்றார். மேலும் இரண்டாவது இடத்தை நிரூப், மூன்றாவது இடத்தை ரம்யா பாண்டியன் மற்றும் நான்காவது இடத்தை தாமரை ஆகியோர் கைப்பற்றினர்.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஜூலி மற்றும் அபிராமியும் கலந்து கொண்டனர். இருவரும் வீட்டில் நெருக்கமாக இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது அபிராமி தான் ஜுலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பிக்பாஸ் வீட்டில் எனது எனர்ஜி பூஸ்டர். லவ் யூ பட்டூஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ஜூலி லவ் யூ டூ கண்ணம்மா என்று குறிப்பிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.