மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. ஏன்மா இப்படி?? அந்த இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு நடத்திய அபிராமி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல சர்ச்சைகளில் சிக்கி பெருமளவில் பிரபலமானவர் அபிராமி. தொகுப்பாளினியாக இருந்த அவர் வெள்ளிதிரையில் நோட்டா, நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் துணைகதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் அபிராமி துருவநட்சத்திரம், நெருஞ்சி, தி லாஸ்ட் கஸ்டமர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளாராம். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். இந்த நிலையில் அபிராமி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதாவது மூக்குக்கு நடுவில் இருக்கும் septum பகுதியில் வளையம் போடவா?வேண்டாமா? என கேட்டு ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார்.
அதற்கு அதிக பட்ச ரசிகர்கள் போடலாம் என கூறி yes என்று பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் அபிராமி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிகபட்ச ஓட்டு ஆம் என கூறியுள்ளீர்கள். அதனால் நான் சில மாதங்களுக்குப் பிறகு கண்டிப்பாக குத்தி septum பகுதியில் வளையம் போட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.