ஹிந்தியில் ரீமேக்காகும் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம்! ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பார்த்திபன் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப்படத்தில் நடிகர் பார்த்திபன் மட்டுமே தனி ஆளாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் மற்றும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் அவர்களும் இசையமைத்துள்ளனர். மேலும் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளது. இந்தநிலையில் பார்த்திபன் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மேலும் நடிகர் பார்த்திபன் அண்மையில் கூட ஹிந்தியில் ரீமேக்காகும் இப்படத்திற்கான தலைப்பு குறித்து ரசிகர்களிடம் ட்விட்டர் பக்கத்தில் ஐடியா கேட்டு இருந்தார். மேலும் அதற்கான படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் ஹிந்தியில் பார்த்திபன் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான போட்டோ ஷூட் பணிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.