திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் இயக்குனர்... அனிருத்துக்கே டஃப் கொடுப்பார் போலயே.!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத். இவருக்கு போட்டியாக புதிய இசையமைப்பாளர் ஒருவர் களமிறங்க இருக்கிறார். பொதுவாகவே சினிமா துறையில் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இருந்து வருகின்றனர்.
முன்பிருந்த காலங்களில் டி ராஜேந்தர் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி அவரை இயக்கி அவரே பாடல்கள் எழுதி அவரை இசையமைத்தும் வந்திருக்கிறார். தற்போது இதே பாணியில் மீண்டும் ஒரு இயக்குனர் களமிறங்க இருக்கிறார் என்பதுதான் கோலிவுடில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். நடிகராகவோ போகுது திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
இவரது சகோதரர் ஆதித்யா இயக்கும் டெவில் என்ற திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் மிஷ்கின். திரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் விதார்த் மற்றும் பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருப்பதோடு ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.