#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லியோ திரைப்படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.. யாரென்று தெரிந்து அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி வருகிறார்.
இது போன்ற நிலையில், பிரபல நடிகரான இளைய தளபதி விஜய் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'லியோ' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், பிரியா பவானி சங்கர் போன்ற பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றன.
இப்படத்தின் படபிடிப்பு காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு 'லியோ' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டே இருக்கும். இதன்படி 'விக்ரம்' திரைப்படத்தில் சூர்யா எப்படி கேமியா ரோலில் இணைந்தாரோ. அதேபோல் தற்போது 'லியோ' திரைப்படத்தில் கமலஹாசன் கேமியோ ரோலில் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.