மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமன்னன் திரைப்படத்தை பார்த்து விட்டு கமலஹாசன் என்ன கூறினார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகும், வடிவேல், கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கமலஹாசன் முன்பே 'தேவர் மகன்' திரைப்படம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி மாரி செல்வராஜ் பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார். மேலும் 'மாமன்னன்' படத்தை திரையிடக்கூடாது என்று பல வழக்குகள் தொடர்ந்து பின் படம் திரையிடப்பட்டது.
இது போன்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள 'மாமன்னன்' திரைப்படம் குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறினார், "அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை, என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள்" என்று கூறியிருக்கிறார். இப்படி இணையத்தில் வைரலாகி வருகிறது.