மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சஞ்சீவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா...வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்.!
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக மாற செய்தது சின்னத்திரை தான்.
அதன்பிறகு இதயம், அவள், போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலான யாரடி நீ மோஹினியில் நடித்தார். ஆனால், சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சஞ்சீவிற்கும், சின்னத்திரை நடிகை பிரீத்திவிக்கும் திருமணம் நடைப்பெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சீவின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.