மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேட்டியில் கதறி அழுத நடிகர் சித்தார்த்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தமிழில் 'பாய்ஸ்' திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
சங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்திற்கு பின்பு ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சித்தார்த் நடித்து வெளியாகவிருக்கும் 'டக்கர்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்த சித்தார்த் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில் சித்தார்த் பேசிக் கொண்டிருக்கும்போதே எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி பேட்டியில் கலந்து கொண்டார். இவரின் வருகையை பார்த்து சித்தார்த் பேட்டி நடுவே கதறி அழுதார். நடிகர் சித்தார்த் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் சுஜாதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.