திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்.!
சின்னத்திரையில் காமெடியில் பட்டையை கிளப்பி வந்த நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவரின் காமெடிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மரணடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடிவேல் பாலாஜியின் இறப்பு குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.