மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பத்திரிக்கையாளரை கடும் கோபத்தில் திட்டிய விஜய்.. என்ன நடந்தது தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார்.
இதன்படி, சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு விஜயை குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, "விஜய் மிகவும் அமைதியான குணமுடையவர். ஆனால் கோபம் பயங்கரமாக வரும்.
மேலும் 'சிவகாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய்யை சந்திக்க வந்தார். அப்போது படப்பிடிப்பின் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு விட்டார். இதனை அறிந்த விஜய் பத்திரிக்கையாளரை தொடர்பு கொண்டு கடுமையாக திட்டினார். விஜய்க்கு இவ்வளவு கோபம் வரும் என்று எனக்கே அப்போதுதான் தெரியும்" என்று கூறியிருக்கிறார் பேரரசு.