மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு.! இனி இப்படிப்பட்ட திரைப்படங்களில் தான் நடிக்கப் போகிறாரா
நடிகரும், நடன இயக்குனருமான லாரன்ஸ் முனி, காஞ்சனா-2, காஞ்சனா-3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தானே இயக்கி, தானே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் வித்தியாசமான கதை களத்தை கொண்ட திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்ட அவர், தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான கதைகளை கேட்க தொடங்கியிருக்கிறார்.
அந்த விதத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்காக அயோத்தி திரைப்படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. மிக விரைவில் மந்திரமூர்த்தி, லாரன்ஸ் கூட்டணியில் ஒரு புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் தான் அயலான், இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் தற்போது ஒரு புதிய திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.