மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு பதில் இவர்தான் நடிக்க இருந்தாராம்! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் விஜய். இவரது படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்கிறது. இவை அனைத்தும் ஒரே படத்திலோ அல்லது ஒரே நாளிலோ நடந்தது இல்லை.
பல வெற்றிப்படங்களையும், தோல்வி படங்களையும் கொடுத்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார் தளபதி விஜய். அந்த வகையில் தளபதியின் சினிமா பயணத்தில் அவ்ருக்கு திருப்பு முனையாக அமைந்தன சில படங்கள். அதில் ஒன்றுதான் காதலுக்கு மரியாதையை. மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் வெளியான காதலுக்கு மரியாதையை திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார் அதன் இயக்குனர் பாசில்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். இந்தப்படத்தில் முதலில் விஜய்க்கு பதில் அப்பாஸ் தான் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். ஆனால் அப்பாஸின் மேனேஜர் செய்த கால்ஷீட் குளறுபடிகளால் படம் விஜய்க்கு சென்றுவிட்டதாம். இதன் மூலம் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்துள்ளார் நடிகர் அப்பாஸ்.