திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியா.? அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரணம் என்ன.?
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகன் ஆன நடிகர் அஜித்குமார், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. இதனால் அவரது ரசிகர்களும், நலன் விரும்பிகளும் மிகுந்த துயர் உற்றனர்.
இந்நிலையில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் குமாரின் உடல்நலம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதில் அவருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், வழக்கமான பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்ததாக தெரிவித்தார்.
பின்னர் அதற்கான சிகிச்சையை அரைமணி நேரம் மேற்கொண்ட பிறகு, வியாழக்கிழமை இரவே சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டதாக தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவுக்குள், அஜித் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும், விடாமுயற்சி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில், மீண்டும் மார்ச் 15 முதல் இரண்டாம் கட்ட படிப்பு வெளிநாட்டில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.