அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
#BREAKING: தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "துணிவு" படத்தின் அட்டகாசமான ட்ரைலர் வெளியானது.. லிங்க் உள்ளே..!
துணிவு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நீங்கள் எதிர்பார்த்த தல தரிசனத்தை கண்டு மகிழுங்கள்.
அல்டிமேட் சூப்பர்ஸ்டார், தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ஜனவரி 12 ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வழங்குகிறார்.
தமிழ்நாட்டின் பட வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இம்ரான் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொகன், ஜி.எம் சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, பகவதி பெருமாள் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக துணிவு தயாராகியுள்ளது.
துணிவு திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.