திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. கோடிக்கணக்கில் பணம் இருந்தும் என்னவொரு எளிமை.! நடிகர் அஜித்தின் அன்சீன் புகைப்படங்களை கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அஜித் சிறந்த நடிகர் மட்டுமின்றி திறமைவாய்ந்த பைக் ரேஸரும் கூட.
நடிகர் அஜித் இமயமலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு கூட அஜித் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. கடந்த மாதம் தொடங்கிய அஜித்தின் பைக் ட்ரிப் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம்.
இந்த நிலையில் தற்போது பைக் ரைடின் போது எடுக்கப்பட்ட பாரும் பார்த்திராத சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ரோட்டோர கடையில் அமர்ந்து அஜித் உணவருந்தும் போதும், டீ குடிக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் அஜித் எவ்வளவு எளிமையாக உள்ளார் என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.