மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வாக்குக்கு பணம் வாங்ககூடாது., ஆனா படத்துக்கு ரூ.1500 வாங்கலாம்ல" - விஜய்யின் அரசியல் விஜயம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அமீர்.!
திரைத்துறையைச் சார்ந்த பலரும் அரசியலுக்கு வந்து தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். முந்தைய காலங்களில் திரைத்துறையை சேர்ந்தோர் பின்னாளில் ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தை ஆண்ட வரலாறும் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் அமீர், "வாக்குக்கு பணம் வாங்க கூடாது என சொல்வது போல, புது படத்தின் முதல் நாள் காட்சிக்கும் திரை கட்டணமாக ரூபாய் 1500 வாங்க கூடாது என விஜய் கூற வேண்டும்.
அதுவும் நேர்மையற்ற செயல்தான். சரி செய்வதாக இருந்தால் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தலைவர்கள் வானத்திலிருந்து குதிப்பது இல்லை. மக்களில் இருந்து தான் வருகிறார்கள்" என்று பேசினார்.