கையில் கோடரியுடன் கல்லூரிக்குள் நுழைந்த லோ பட்ஜெட் புஷ்பராஜ்.. இதெல்லாம் கல்விக்கு தேவையாங்க?
வாவ்.. நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா! 21 வயதில் ஹீரோயின்களை மிஞ்சும் பேரழகில் எப்படியிருக்கார் பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதனைத் தொடர்ந்து சினிமாத்துறையில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் விஐபி, ஜாலி, பூச்சூடவா, மலபார் போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாத நிலையில், அவர் பெரும்பாலான திரைப்படங்களில் இரண்டாவது நாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் அப்பாஸ் திருட்டுப்பயலே படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகியிருக்கும் நடிகர் அப்பாஸின் 21 வயது மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் செம அழகா இருப்பதாக கூறிவருகின்றனர்.