#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீராப்பாய் பேசிய விஷாலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடிகர் சங்க தேர்தலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு மோதுகின்றனர்.
இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரை 440 வாக்குகளுக்கு மேல் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மைக் மோகன் வந்தபோது, அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று கூறிய நிலையில் நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவானது என்ற தகவல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.