மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடையில் திடீரென நடிகர் பாலகிருஷ்ணா செய்த காரியம்.! பதறிபோன நடிகை அஞ்சலி.! வைரல் வீடியோ!!
தெலுங்கு சினிமாவில் இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்ஸ் ஆஃப் கோதவரி'. இந்தப் படத்தில் ஹீரோவாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். மேலும் அவருடன் அஞ்சலி, நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி
இந்நிலையில் அண்மையில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டிருந்தார்.
அஞ்சலியை தள்ளிவிட்ட நடிகர் பாலகிருஷ்ணா
அப்போது மேடையில் படக்குழுவினர் அனைவரும் நிற்க நடிகர் பாலகிருஷ்ணா அவர்களை தள்ளி நிற்க கூறியுள்ளார். அவர்கள் கொஞ்சம் மெதுவாக நகரவே உடனே பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை வேகமாக தள்ளியுள்ளார். இந்த நிலையில் கீழே விழ சென்ற அஞ்சலி சுதாரித்துக்கொண்டு நின்றுள்ளார். பின் உடனே அஞ்சலி சிரித்து சமாளித்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அவர் விளையாட்டாக செய்ததாக கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: "எனக்கு திருமணம் முடிந்து விட்டது" நடிகை அஞ்சலியின் பரபரப்பு பேச்சு.!?
— Out of Context Telugu (@OutOfContextTel) May 29, 2024
இதையும் படிங்க: நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?