மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோதானம்! ஆனால்?
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான வடசென்னை படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் மாறி 2 படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
தற்போது அசுரன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்நிலையில் தனுஷின் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். காதல், ரொமான்ஸ், பாடல்கள் என சூப்பர் ஹிட் அடித்தது இந்த படம்.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பரத் தானம். ஏதோர் ஒருசில காரணங்களால் பரத் நடிக்கமுடியால் போக அந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதை பரத் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.