மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா எப்படி மாறிட்டாங்க பாத்தீங்களா! 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்தால் அழியாத காதல் காவியமாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று "காதல்" திரைப்படம். இந்த படம் 2004 ம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா தங்களது நடிப்பு திறமையை பெருமளவில் வெளிக்காட்டி இருப்பார்கள். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூல் சாதனையும் குவித்தது . இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முதலாக தயாரித்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்நிலையில், பரத்தும் சந்தியாவும் சமீபத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.