மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்...தளபதி விஜய்க்கு இப்படியொரு குட்டி ரசிகரா! தனது மகனின் கியூட் வீடியோவை வெளியிட்ட பிரபல முன்னணி நடிகர்!
தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். நடிப்பு மட்டுமின்றி அசத்தலான நடன திறமை கொண்ட இவர் அதனை தொடர்ந்து காதல், எம்டன் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமும் உருவானது.
இந்நிலையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளாகவே, பரத் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவி வந்தது. இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தநிலையில் இறுதியாக போலீஸ் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
Thalapathy young fan !! @actorvijay pic.twitter.com/KiZa9Zi3Xz
— bharath niwas (@bharathhere) August 2, 2020
நடிகர் பரத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் ஒளிபரப்பானது. இந்த படத்தினை நடிகர் பரத்தின் குட்டிமகன் ஆர்வத்துடன் ரசித்து பார்த்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் பரத், தளபதி விஜய்யின் குட்டி ரசிகன் என அந்த கியூட் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.