#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகர் சார்லியின் மகனுக்கு திருமணம்! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சார்லி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள்முதல் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என இப்போதிருக்கும் பிரபல ஹீரோக்கள் வரை 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் சார்லி.
புது முக நடிகர்களின் வருகை, அடுத்த தலைமுறை படங்கள் என சினிமாவின் ட்ரெண்ட் மாறியதை அடுத்து இவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவரின் நடிப்பில் கூர்க்கா, போத ஏறி புத்தி மாறி, வெள்ளைப்பூக்கள் என சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சார்லியின் மகன் ஆதித்யாவுக்கும் அமிர்தா என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நேற்று சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரபு, இசைஞானி இளையராஜா, விஜய குமார், அருண் விஜய் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தற்போது மணமக்களின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்கிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.