ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிம்புக்கு சொம்படிக்கிறேன் னு சொல்லி எத்தனை படவாய்ப்பு போச்சு தெரியுமா? - கூல் சுரேஷ் கொந்தளிப்பு.!
சிம்புக்கு ஆதரவாக நான் பேசியதால் எத்தனை படவாய்ப்புகள் பறிபோனது என உங்களுக்கு தெரியுமா? என நடிகர் கூல் சுரேஷ் ஆதங்கப்பட்டு பேசினார்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இன்று வெளியான திரைப்படம் மாநாடு. பல சர்ச்சை, பிரச்சனைகளுக்கு பின்னர் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகியது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தை காண வந்திருந்த நடிகர் கூல் சுரேஷ், ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில் திடீரென ஆவேசத்தில் பேச தொடங்கினார். மேலும், படம் ரிலீஸ் ஆகுமா? என்ற அச்சம் இருந்ததால், திரையரங்குக்கே நேரில் வந்து காலையிலேயே காத்திருந்தார்.
அவர் பேசுகையில், "படத்தை பலரும் கலாய்க்குறீர்கள். படம் வரவில்லை என்று கூறுகிறீர்கள். ஒரு படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது எவ்வுளவு கடினம்தெரியுமா?. நான் சிம்புக்கு ஆதரவாக பேசுகிறேன் என படவாய்ப்பே தரவில்லை.
நான் சிம்புக்கு சொம்படிக்கிறேன் என்று கூறுவார்கள். சிம்புக்கு ஆதரவாக நான் பேசியதால் எத்தனை படவாய்ப்புகள் பறிபோனது என உங்களுக்கு தெரியுமா?. யோசனை செய்து பாருங்கள். நாம் நம்மை எதிர்ப்பவர்களையும் தவறாக பேச கூடாது. இங்கு 4 பேர் தவறாக பேசுகிறான். ஏன் அவன் படத்துக்கு வர வேண்டும். நான் திரையரங்கிலேயே தான் இருப்பேன். எங்கும் செல்லமாட்டேன்.