கூல் சுரேஷுக்கு போன் போட்ட அரசியல் கட்சி தலைவர் : வரைமுறை இல்லாமல் வறுத்தெடுத்த பரபரப்பு ஆடியோ லீக்.!



actor-cool-suresh-trolled

நான் தூணிலும், துரும்பிலும் இருப்பேன் என்று திரையரங்கில் யூடியூப் சேனலுக்கு ரிவியூவ் கொடுத்து பிரபலமான நடிகர் கூல் சுரேஷ். இவர் முந்தைய காலங்களில் சில படங்களில் நடித்து, நற்பணி மன்றத்தை தொடங்கி மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்து வந்தவர், ஒருகட்டத்திற்கு மேல் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் தனது பாணியை மாற்றிக்கொண்டார். அதன்பின்னரே ரிவியூவ் வேலை தொடங்கியது. 

எந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் முதல் ஷோ பார்த்துவிட்டு ரிவியூவ் தரும் கூல் சுரேஷ், நடிகர் சிம்புவை தனது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டவர். சிம்புவின் வெந்து தணிந்தது காடு தலைவருக்கு வணக்கத்தை போடு என்ற வாசகத்துடன் இவர் பேசத்தொடங்கி தனது பேச்சாற்றலால் அனைத்தையும் கூறிவிடுவார். இவ்வாறான தருணத்தில் கூல் சுரேஷ் சிம்புவின் பட வெளியீட்டு நாளில் அரசு விடுமுறை கேட்டு அடாவடி செய்ய, கட்சித்தலைவர் கூல் சுரேஷுக்கு போன் போட்டு டோஸ் விட்ட சம்பவம் நடந்துள்ளது.

Actor Cool Suresh

தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் சிவா, திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் தொடர்பு கொண்டு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் முதலில் நன்றாக பேசிக்கொண்டு இருக்கும் இருவரும், இறுதியில் தங்களின் குரல் பாணியை மாற்றிவிடுகின்றனர். 

அதாவது, சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன குரல் எழுப்ப, அப்போது கூல் சுரேஷ் ஆகிய நீ எங்கே சென்றாய்? நான் அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து எனது தரப்பு கருத்துக்களை அறிக்கையாக பதிவு செய்தேன். அன்று அவருக்கு பிரச்சனை வந்தபோது ஓடி ஒழிந்த நீ, இன்று எப்படி அரசு விடுமுறை கேட்பாய்?. சுதந்திர போராட்ட வீரருக்கு இதை கேட்டிருக்கிறாயா?. நீங்கள் இளைஞர்களை கெடுக்காதீர்கள் என்று இயன்றளவு மரியாதையுடன் பேசுகிறார். 

மறுபுறம் கூல் சுரேஷ் எடுத்த எடுப்பில் அரசியல்கட்சி தலைவர் என்று கூறியதும் உனக்கு என்ன வேலை? நீ முதலில் வேலைக்கு செல் என்று ஹை பிட்ஸிலேயே மைண்டைன் செல்கிறார்.