திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கதை சொல்ல வந்த இயக்குனரை கடுப்பாக்கிய தனுஷ்.. கை கொடுத்த சந்தானம்.! என்ன நடந்தது தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியிருக்கிறார் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் பல சருக்கல்களை சந்தித்தாலும் தற்போது முன்னணி நடிகராக பிரபலம் அடைந்துள்ளார்.
இதுபோன்ற நிலையில், தனுஷிடம் கட்டாகுஸ்தி பட இயக்குனர் அய்யாவு என்பவர் கதை சொல்ல சென்றிருந்தாராம். அப்போது கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் நிறுத்தி கரேக்சன் கூறினாராம். இதையே தொடர்ந்து செய்ததால் இயக்குனர் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாராம்.
இதனை அடுத்து காமெடி நடிகர் மற்றும் கதாநாயகராக நடித்து வரும் சந்தானத்திடம் அந்த கதையை கூறவே அவருக்கு பிடித்து போய் தற்போது அப்படத்தில் நடிக்க தயாராகி விட்டாராம். இச்செய்தி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.