திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நான் இப்படி மாறியதற்கு என் மனைவி ஐஸ்வர்யா தான் காரணம்" உண்மையை போட்டுடைத்த தனுஷ்.!?
இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழ் திரைத்துறையில் முதன் முதலில் நடிகராக காலடி எடுத்து வைத்த தனுஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய தனுஷ், இந்திய அளவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்து வந்தாலும் மற்ற மொழி திரைப்படங்களில் ஹிட் கொடுத்து திரைத்துறையில் வெற்றி நடை போட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென்று இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றாலும் 2022 ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் நடிகர் தனுஷின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, "நான் வேஷ்டி சட்டை அணிய மாட்டேன். என் மனைவி ஐஸ்வர்யா தான் நான் வேஷ்டி சட்டை போட்டால் அழகாக இருக்கும் என்று கூறினார். அன்றிலிருந்து நான் தொடர்ந்து வேஸ்டி சட்டை அணிந்து வருகிறேன். மேலும் புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் ஐஸ்வர்யாவால் தான் எனக்கு வந்தது. இவ்வாறு என்னுடைய பெரும்பாலான பழக்கங்களுக்கு ஐஸ்வர்யா தான் காரணம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.