மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் தனுஷ் கொடுத்த பெருந்தொகை.! அடேங்கப்பா.. எவ்வளவு தெரியுமா?
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக கட்டிடம் கட்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. கட்டிட பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க ரூ.40 கோடி வரை தேவைப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
நிதியுதவி செய்த பிரபலங்கள்
மேலும் சங்கத்தின் சார்பாக நிதி திரட்டப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் சிலர் தாமாக முன்வந்து நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், நெப்போலியன்,சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நிதிஉதவி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷும் நடிகர் சங்க கட்டிட பணிக்காக நிதி உதவி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் பர்ஸ்ட்லுக் வீடியோ இதோ.!
தனுஷ் கொடுத்த பெருந்தொகை
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.தனுஷ் அவர்கள் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி S. முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking : தனுஷின் தந்தையாக அடையாளப்படுத்திய நபர் மரணம்.!