#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிவி பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு.!
இயக்குனர் பிவி சங்கர் இயக்கத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் கள்வன் (Kalvan). இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து வழங்கியது. படத்தில் ஜிவி பிரகாசுடன் பாரதிராஜா, இவானா, தீனா உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
வெற்றியடைந்த திரைப்படம்:
சான் லோகேஷ் எடிட்டிங்கில், பிவி சங்கர் ஒளிப்பதிவில், நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 4 ம் தேதி திரைக்கு வந்த இப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. படம் பலதரப்பிலும் பாட்டுக்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது படம் ஓடிடி வெளியீடுக்கு தயாராகி இருக்கிறது.
ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு:
அதன்படி, மக்கள் பாராட்டுகளை பெற்ற கள்வன் திரைப்படம், மே 14 ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தலத்தில் வெளியாகிறது. படத்தை திரையரங்கில் பார்க்க இயலாதவர்கள், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சந்தா வைத்திருப்பவர்கள் அதனை கண்டு ரசிக்கலாம்.