மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றிவிழா: இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண்.!
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா, ராம ராஜேந்திரா, இளவரசு உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பார்க்கிங்.
இப்படம் கடந்த 1 டிசம்பர் 2023 அன்று வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை பல திரையரங்கில் தொடர்ந்து ஓடி வருகிறது.
சாம் சி.எஸ் இசையில், பேஷன் ஸ்டுடியோஸ் - சோல்ஜர்ஸ் கம்பெனி தயாரிப்பில் படம் உருவாகி இருந்தது. இந்நிலையில், படம் நல்ல வெற்றியை அடைந்து வசூலை குவித்ததைத்தொடர்ந்து, இன்று படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது, இயக்குனர் ராம்குமாருக்கு படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், தங்கம் மோதிரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.