மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் ஹரிஷ் கல்யாண் வில்லனாக நடிக்கப் போகிறாரா.? எந்த படத்தில் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஹரிஷ் கல்யாண். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
வெள்ளி திரையில் தனது நடிப்பு திறமையின் மூலம் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது ராம் இயக்கத்தில் 'பார்க்கிங்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் இப்படத்தில் இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஹரிஷ் கல்யாண் பேசினார் .
அவர் கூறியதாவது, "ஒரே மாதிரி கதை, கதாபாத்திரத்தில் நடிக்க போரடிக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வந்ததையடுத்து ஹரிஷ் கல்யாண் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.