மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்லேட் பாய் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும்., டும்., டும்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின், பியார் பிரேமா காதல், தாராளபிரபு, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும், ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பில், "அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த நிபந்தனைகளும், அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள், அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள், ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும், உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அன்புடன் ஹரிஷ் கல்யாண்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.