வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கரண்ட் ஷாக்கால் சுயநினைவின்றி தவிக்கும் தமிழ் காமெடி நடிகர்.. இவருக்கா இப்படியொரு நிலை?..!
தமிழ் திரையுலகில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ஜனகராஜ். இவர் நடிகர் கவுண்டமணி, செந்தில், ரஜினிகாந்த் ஆகியோருடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு போட்டியாகவும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இழுத்துப் பேசி தனக்கென தனிபாடி லாங்குவேஜ் கொண்ட ஜனகராஜ் தற்போது வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இவர் முகவாதத்திற்கு கரண்ட் ஷாக் வைத்ததன் காரணமாக நரம்பு பிரச்சனை மற்றும் சுயநினைவிழப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது மகனுடன் அமெரிக்காவில் அவர் வாழ்ந்து வருகிறார்.