மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனது முதல் முக்கிய அரசியல் எதிரியே அதுதான்.! ஆதங்கமடைந்த நடிகர் கமல்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அரசியலில் களமிறங்கி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக தீவிர அரசியலிலும் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வரும் பா.இரஞ்சித் சென்னை எழும்பூரில் நீலம் புக்ஸ் என்ற புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளார். அதனை நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அரசியல் என்பதையும், கலாச்சாரம் என்பதையும் தனியாக வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் உள்ளோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். அனைவரும் தலைவர் என்ற உணர்வு அனைவருக்கும் வரும்போது உலகின் மிகப்பெரும் ஜனநாயகமாக இந்தியா வரும்.
எனது முக்கியமான அரசியல் எதிரியே சாதிதான். நான் 21 வயது பையனாக இருக்கும் போதே அதனை கூறியுள்ளேன். இப்போது அதனை அழுத்தமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் வந்துள்ளது. சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். அது இன்றுவரை நடந்த பாடில்லை என கூறியுள்ளார்.