திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இந்தக் குழந்தை யார் தெரியுமா?! 90களில் கலக்கிய வில்லன் இவர்!
1990களில் முன்னணி வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து பரபலமடைந்தவர் கரண். முன்னதாக இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கரண்.
1992ம் ஆண்டு ரஜினிகாந்துடன் "அண்ணாமலை" படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தைக் கவர்ந்தார். முன்னதாக தமிழில் முத்துராமன், கே. ஆர். விஜயா நடித்த "முருகன் அடிமை" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கரண்.
மேலும் கமலஹாசனுடன் "நம்மவர்" படத்திலும் ஒரு முரட்டுத்தனமான கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறிது கால ஓய்வுக்குப் பின் நடிக்க வந்த கரண் ஹீரோவாக கொக்கி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரது சிறு வயதுப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் "அட! நம்ம கரணா இவரு!" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.