திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அவரோட இறுதி ஊர்வலத்துல கலந்துக்க முடியலையே" - கண்கலங்கி உருகிய நடிகர் கார்த்திக்.!
மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்திக், அங்கு மலர் வளையம் வைத்து தனது மரியாதை செலுத்தி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, கண்கலங்கி உருக்கமாக தனது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது, அவர் பேசுகையில், "அவரின் இறுதி ஊர்வலகத்தில் கலந்துகொண்டு இறுதி மரியாதையை செய்யாதது எனக்கு வாழ்நாள் முழுவதும் பேரிழப்பு.
அவரை எனக்கு சிறுவயதில் இருந்து நன்கு தெரியும். வளர்ந்தபின் நடித்து, இறுதியில் நடிகர் சங்கத்தின் பயணத்தின்போது அவரை நேரில் சந்தித்து பேசினோம். அந்த நினைவுகள் மறக்க முடியாது. சங்கத்தில் நாங்கள் சந்தித்த இடரை தவிர்க்க அவரையே நினைத்து நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
• மறைந்த நடிகர் #விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய #கார்த்தி அண்ணன், சிவகுமார் ஐயா மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அண்ணன்.@Karthi_Offl | @prabhu_sr#Karthi #RIPCaptainVijayakanth #RIPVijayakanth #CaptainVijayakanth #Vijayakanth pic.twitter.com/2YSwtxmIcC
— Karthi Videos (@Karthi_Videos1) January 4, 2024