மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இப்படி ஆகிருச்சே! ஜீ தமிழ் தொலைக்காட்சி விடுத்த அதிரடி அறிவிப்பு! செம வருத்தத்தில் செம்பருத்தி ரசிகர்கள்!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து தொலைக்காட்சிக்கே பெருமை சேர்த்து சாதனை படைத்த சீரியல் செம்பருத்தி. இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஆபீஸ் சீரியலின் மூலம் பிரபலமான கார்த்திக்கும், ஹீரோயினாக பார்வதி கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் வெளியேறுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக ஜீ தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் செம்பருத்தி தொடரை ஒரு மாபெரும் வெற்றி தொடராக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும் இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பை கொடுத்த கார்த்திக்கும் எங்கள் பாராட்டுக்கள். ஆனால் இந்த தொடரில் இருந்து சில எதிர்பாராத காரணங்களுக்காக கார்த்திக் மாற்றப்பட்டு இருக்கிறார். ஜீதமிழ், ஜீ 5 உடனான அவரது தொடர்பு நீடிக்கும். அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.