மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. அழகா இருக்காங்களே! நடிகர் கருணாஸின் மகளை பார்த்துருக்கீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் நந்தா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதனைத் தொடர்ந்து அவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நாயகனாக நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்துள்ளார்.
மேலும் கருணாஸ் அரசியலிலும் களமிறங்கி செம பிஸியாக உள்ளார். அவரது மனைவி நாட்டுபுற பாடகி கிரேஸ். இவர் சினிமாவில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.
கருணாஸ்- கிரேஸ் அவர்களது மகன் கென் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது அவர்களது குடும்பப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர்களது மகளும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்...